Facts to consider before opening a demat account.

20 Nov

டீ-மேட் கணக்கை திறக்கும் முன் கவனிக்க வேண்டியவை
டீ-மேட் கணக்கு என்பது உங்கள் வங்கி சேமிப்பு கணக்கு போன்ற எளிய கணக்கு கிடையாது நீங்கள் நினைத்த மாத்திரத்தில் தொடர/மூட. டீ-மேட் கணக்கு கிட்டதட்ட வாழ்க்கை துணை போன்று வாழ் நாள் முழுவதும் உங்கள் உடன் வரும் ஒன்று.
அதனால் கணக்கை திறக்கும் முன் மேற்காணும் தகவல்களை கவனிக்கவும்.
1. வருட கட்டணம்
2. டெபிட் கட்டணம்
3. வாடிக்கையாளர் சேவை

வருட கட்டணம்
இது 400 – 850 ரூ வரை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறும்.
பலர் முதல் வருடம் மட்டும் இக்கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றனர். இதை ’இலவச டீ-மேட்’ என்று விளம்பரம் செய்கின்றனர். கவனத்தில் கொள்ளவும் இது ஒரு வருடம் மட்டுமே.
சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு வாழ் நாள் முழுவதும் வருட கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றனர். உதாரணத்துக்கு Integrated Enterprises 4000(1000 refundable) ரூபாய்க்கு இத்தகைய சேவையை வழங்குகிறது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருட கட்டணம் கட்ட தேவை இல்லை.
டெபிட் கட்டணம்
இது ஒவ்வொரு முறையும் உங்கள் டீ-மேட் கணக்கில் இருக்கும் பங்கை விற்கும் போதும் வசூலிக்க படுவது. ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் வசூலிக்கபடும். உங்கள் பங்கு விற்பனை மதிப்பு 50000 ரூபாய்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் இது % அடிப்படையில் வசூலிக்கப்படும் அப்போது அது 25 ரூபாய்க்கு மேல் இருக்கும். இதற்கு சேவை வரி உண்டு.
சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு வாழ் நாள் முழுவதும் டெபிட் கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றனர்(அவர்கள் ப்ரோக்கர் மூலம் விற்றால் மட்டும்). உதாரணத்துக்கு Integrated Enterprises 4000(1000 refundable) ரூபாய்க்கு இத்தகைய சேவையை வழங்குகிறது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருட கட்டணம் மற்றும் டெபிட் கட்டணம் கட்ட தேவை இல்லை.
இந்த கட்டணத்தில் உஷாராக இருக்கவும்.
கீழ்கண்ட உதாரணம் நீங்கள் ஏன் உஷாராக இருக்க வேண்டும் என்பதை விளக்கும்.
ஜனவரி 2 2012 1 கோல்கேட் 1000 ரூபாய்க்கு வாங்குகிறிர்கள் உங்கள் ப்ரோக்கர் 3.5-25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். நிகர முதலீடு = 1025
பிப்ரவரி 2 2012 கோல்கேட் 1075 ரூபாய்க்கு விற்கீறீர்கள் உங்கள் ப்ரோக்கர் 3.5-25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். நிகர வருவாய் = 1050.
இலாபம் = 1075 – 1000 = 75 ரூபாய்
குறிகிய கால மூலதன ஆதாய வரி = 75*.15 = 11.25
ப்ரொக்கரேஜ் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் = 1050-1025-11.25 = 13.75
டெபிட் கட்டணம் = 25 ரூபாய்
உண்மையான இலாபம் = 13.75-25 = -11.25
உங்கள் பங்கு 7.5% வளர்ந்தாலும் உங்களுக்கு நஷ்டமே.
தனிப்பட்ட முறையில் நான் இந்த கட்டணத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பிறகு Integrated Enterprises 4000(1000 refundable) ரூபாய்க்கு டீ-மேட் கணக்கை திறந்து தவிர்த்தேன்.
வாடிக்கையாளர் சேவை:
பல பெரிய நிறுவனங்கள் குறிப்பாக வங்கிகள் உங்கள் தலையில் டீ-மேட் கணக்கைக் கட்டும். உங்களை கணக்கைத் திறக்க வற்புறுத்தும் உங்கள் கிளை நீங்கள் ஒரு பிரச்சினை என்று வரும் போது உங்களை மற்ற கிளைகளை(டீ-மேட் ப்ரத்தியேக கிளைகள்) அணுகுமாறு கை கழுவி விடும். இதற்கு காரணம் உங்களால் அவர்களை விட்டு விலக முடியாது என்ற எண்ணம்(என்று டீ-மேட் போர்டபிலிட்டி வருமோ!!!). மேலும் வங்கி ஊழியர்களுக்கு டீ-மேட் மற்றும் டேரிடிங் குறித்து அதிக விவரம் இல்லை.
உங்கள் DP யின் பிரதான தொழில் டீ-மேட்/டேரிடிங் ஆக இருக்கும் பட்சத்தில் இப்படி ஆக வாய்ப்பு குறைவு. மற்றும் இத்தகைய நிறுவனங்கள் வியாபார ரீதியில் உங்களுக்கு நல்ல சேவை மற்றும் திட்டங்களை வழங்கும்.
இதை எனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து எழுதுகிறேன்.

மேலும் கட்டண விவரத்துக்கு,

https://nsdl.co.in/downloadables/excel/depositoryparticipants_am.xls

https://nsdl.co.in/downloadables/excel/depositoryparticipants_nz.xls

Few months back “Integrated Enterprises” has changed the fees and features… Please cross check before opening an account.

 

Disclaimed: I am no way *financially* connected to “Integrated Enterprises”. Use your own judgment.
உங்களுக்கு ஏற்ற டீ-மேட் கணக்கை திறக்க வாழ்த்துக்கள்.
-காமேஷ் ஜெயச்சந்திரன்

Advertisements

2 Responses to “Facts to consider before opening a demat account.”

  1. Ashok Yarlagadda (@ashokzhere) November 22, 2012 at 8:09 am #

    Hi Kamesh,

    Could you please point me to the english version of “Facts to consider before opening a demat account”.

    • kameshj November 22, 2012 at 9:03 am #

      Ashok,

      I guess you may have my ppt. This is just translation of session I conducted few months back.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: